பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பேபி ஜான் என்ற திரைப்படம் மூலமாக ஹிந்தியில் நுழைந்துள்ள கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தெறி படத்தில் சமந்தா நடித்த ரோலில் தான் ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் திருமணம் முடிந்த கையோடு கழுத்தில் மஞ்ச தாலியுடன் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது வருண் தவான் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் வெட்கத்தில் தளைத்தார்.

இந்த நிலையில் பேபி ஜான் படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் படங்களில் நடிக்க மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட் போனதும் தன் முதல் படத்திலேயே நான்கு கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பாலிவுட் பக்கம் போனதும் அப்படியே சம்பளத்தை உயர்த்திட்டாங்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
