#image_title
பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான கீதாஞ்சலி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீசான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் பேபி ஜான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் கீர்த்தி சுரேஷ் என்ட்ரி கொடுக்கிறார். வருகிற டிசம்பர் மாதம் பேபி ஜான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஷூட்டிங் முடிவடைந்ததால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கீர்த்தி சுரேஷ் பிசியாக ஈடுபட்டு உள்ளார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்தார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றாவது தனியாக இருக்கிறோமே என பீல் பண்ணி இருக்கீங்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு கீர்த்தி சுரேஷ் நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே என கூறினார். அதனை கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி சற்று அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து ரிலேஷன்ஷிப் எதிர்பார்ப்புகள் பற்றி கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் பார்ட்னர்ஷிப் என்பது நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். அதிகமாக காதலிக்க வேண்டும். இப்போது பர்சனலாகவும், ப்ரொபஷனலாகவும் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் என கீர்த்தி சுரேஷ் பேட்டியில் கூறினார். இதனை பார்த்து ரசிகர்கள் இப்போது கீர்த்தி சுரேஷ் யாரை காதலிக்கிறார் என யோசிக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது இந்த விஷயம் தான் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…