முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பைலட்ஸ், அச்சனே எனக்கு இஷ்டம், குபேரன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணியில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கீர்த்தி சுரேஷ் பிரபலமானார். இதனை தொடர்ந்து தனுசுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜயுடன் பைரவா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவருக்கு பெற்று தந்தது. நடிகைகள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.
சரியான உணவு, டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து ஸ்லிம்மாக இருப்பார்கள். அதிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலும் உடல் எடையை குறைத்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

