#image_title
இந்தியாவில் மிக முக்கியமான பிரபலங்களில் மிகப் பிரபலமான முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி வருபவர். அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். 75 வயதை கடந்த போதிலும் இன்றும் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டே இருக்கிறார் ரஜினிகாந்த்.
எடுத்த உடனேயே நடிகராக திரையுலகில் ரஜினிகாந்த் அவர்கள் வந்து விடவில்லை. சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து,பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து படிப்படியாக நாயகனாக நடித்து தன்னை சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு தனது உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் தக்க வைத்து கொண்டு இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்படி சூப்பர் ஸ்டார் படிப்படியாக உயர்ந்து வந்த காலத்தில் 1970களின் பிற்பகுதியில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இரவுபகலாக தூங்காமல் நடித்துக் கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் மற்றவர்களும் சும்மா இருக்கவில்லை.
ரஜினிகாந்த் அவர்களை மேலே வர விடாமல் தடுப்பதற்கு ஏகப்பட்ட வேலைகள் நடந்தன. வேண்டுமென்றே அவரை கைது செய்ய வைப்பது, பிறகு விடுவிக்க செய்வது, படபிடிப்பின் போது இடையூறு செய்வது, அவர் உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் இருந்தபோது. அவருக்கு மனநலம் சரியில்லை அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது ரஜினிகாந்தின் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற பல வதந்திகள் ரஜினிகாந்த் அவர்களை சுற்றி வந்தன. அந்த காலத்தில் இதுவே மிகப்பெரிய பேச்சு பொருளாக இருந்தது,
இத்தனை வதந்திகளும் சுற்றிவர ரஜினிகாந்த் அவர்களுக்கு மக்களிடையே ரசிகர் பட்டாலும் இருந்தாலும் பல சர்ச்சைகளிலும் வதந்திகளிலும் சிக்கியதால் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பதற்கு இயக்குனர்கள் தயங்கினார்கள்.அப்போது தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள் மட்டும் ரஜினிகாந்த் அவர்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் எந்த வதந்திகளையும் நம்பாமல் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் அவரை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் ஓடும் அவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறி ஒரு படத்தை எடுக்க வைத்தார்.
அப்படி உருவான படம் தான் பில்லா. 1980 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து பில்லா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். எம் எஸ் விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். கவியரசு கண்ணதாசன் இப்படத்திற்கான பாடல்களை எழுதி இருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற ‘மை நேம் இஸ் பில்லா’, ‘வெத்தலைய போட்டேன்டி’ போன்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.
இப்படத்தில் ‘நாட்டுக்குள்ள எனக்கொரு ஊரு’ என்று ஒரு பாடல் இருக்கின்றது. இந்த பாடலுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதையும் இருக்கிறது. அது என்னவென்றால், ரஜினிகாந்த் எல்லா பக்கத்தில் இருந்தும் பிரச்சனையை சந்தித்த காலகட்டத்தில் தான் இந்த பில்லா திரைப்படத்தில் நடித்திருப்பார். அவரை முன்னேற விடாமல் தடுப்பதற்கு பல சதி வேலைகள் நடந்தன. அவற்றை முறியடித்து மீண்டும் வந்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரை எதிர்த்தவர்க்கும் மக்களுக்கிடையே ஏற்பட்ட வதந்திக்கும் பதில் சொல்லும் விதமாக ஒரு பாட்டு எழுத வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் ரஜினிகாந்த்.
அப்படி உருவான பாடல் தான் நாட்டுக்குள்ள எனக்கொரு ஊரு ஊருக்குள்ள எனக்கொரு பேரு அப்படி என்று ஆரம்பிக்கும் பாடல் ஆகும். இந்த பாடலின் மூலம் தன்னை வெறுப்பவர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினிகாந்தை மனதில் வைத்து கவியரசு கண்ணதாசன் பாடலை எழுதியிருப்பார். அனைவராலும் ஒடுக்கப்பட வேண்டும் என்று நினைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனது ஒரே பாடல் மூலம் தூக்கிவிட்டார் கவியரசு கண்ணதாசன்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…