நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.

#image_title
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பின்னர் டாடா படத்தில் நடித்தார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

#image_title
தற்போது பிளடி பக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கவின், நம்மள அம்மா அப்பா காசு கட்டி படிக்க வைக்கும்போது அதை கூட இருந்தே பார்த்தால இப்போ முடிஞ்ச அளவுக்கு பணத்தை சேமிக்கிறேன்.

#image_title
இப்போ நாம சம்பாதிக்கும்போது எது தேவையோ அதை மட்டும் வாங்குவேன். தேவையானதை வாங்கிட்டு மீதியை சேமிப்பேன். 50 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கணும்னா உடனே டக்குனு அதை வாங்கிடாத. 100 ரூபாய் சேர்ந்தபோ வாங்குன்னு நெல்சன் சொல்வாரு காசு விஷயத்துல மட்டும் backup இருக்கனும் என்று கூறியுள்ளார்.