நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதன்படி அவருடைய நடிப்பில் வெளியான டாடா மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் கவின் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து உள்ளன.
இந்த நிலையில் நேற்று பிளடி பெக்கர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் சென்னையில் பட குழுவினர் நடத்தினர். இதில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன் திலிப் குமார், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் மற்றும் கவின் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டு படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் மூலம்தான் சிவபாலன் முத்துக்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். அதனைப் போலவே இயக்குனர் நெல்சன் இப்படம் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவின், நெல்சன் திலிப் குமார் மற்றும் சிவபாலன் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக செயல்பட்டேன். இந்த படத்துக்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை தனக்கு ஏற்பட்டது. இந்த படம் குறித்து தன்னிடம் பேசிய நெல்சன் திலீப் குமார் பண்ணிடுவியா என்று மட்டும் தன்னிடம் கேட்டார், நானும் பண்ணிடுவேன் என்று தலையாட்டினேன்.
அன்னைக்கு நைட்டு எனக்கு ஃபுல்லா தூக்கமே வரல என்ன ஒரு வார்த்தை கேட்டுட்டு இப்படியே போயிட்டாருன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இந்த ஒரு வார்த்தை மட்டும் தான் எங்களுக்குள் படம் குறித்த பேச்சாக இருந்தது. தன் மீதும் தன்னுடைய நடிப்பு மீதும் நெல்சன் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற தான் முழு வீச்சில் செயல்பட்டேன். தான் நடிப்பில் செயல்படுவதற்கு முன்னதாக மாதத்தில் இவ்வளவு சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையிலேயே செயல்பட்டேன். ஆனால் அடுத்தடுத்து எனக்கு அமைந்த படங்கள் என்னுடைய நம்பிக்கையை ஏமாற்றியது என்று கவின் கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…