நம்ம நயன்தாரா கூட நடிக்க ரைசிங் ஸ்டார் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தலைத்தெரிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்..!

By Mahalakshmi on ஜூன் 1, 2024

Spread the love

நடிகர் கவின் ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தில் தன் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி இருக்கின்றாராம். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் கல்லூரி காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டயன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் கதாநாயகனாகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் சினிமாவில் வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த உடன் இவர் நடித்த முதல் திரைப்படம் லிஃப்ட்.

   

   

இப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் கடந்த ஆண்டு டாடா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனால் ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் கடந்த மே பத்தாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் படம் சுமாரான வெற்றியை கொடுத்திருக்கின்றது. இருப்பினும் நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கின்றார் கவின். நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பக்கர் என்கின்ற படத்திலும், நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படத்திலும் நடித்திருக்கிறார்.

இது தவிர வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு இடவன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கவின் நடிக்க இருக்கின்றார், இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கின்றது.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். தன்னைவிட மூத்த பெண்ணை காதலிக்கும் இளைஞனாக கவின் இப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் வாங்க உள்ள சம்பளம் குறித்து தகவல் தான் வெளியாகி உள்ளது. அதாவது 8 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். ஸ்டார் திரைப்படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிய கவின் தற்போது தனது சம்பளத்தை 8 கோடியாக உயர்த்திருப்பது மிகவும் பேசுபொருளாக இருந்து வருகின்றது.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நடிகை நயன்தாராவே ஒரு படத்திற்கு 10 கோடி தான் சம்பளம் வாங்கி வரும் நிலையில் வெறும் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு நடிகர் கவின் இவ்வளவு சம்பளம் வாங்குவது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகின்றது.