Categories: CINEMA

ஹிட் ஆனதே ஒரு படம்தான், அடுத்த படத்துக்கு இவ்வளவு கோடி சம்பளமா? கவினின் திடீர் மாற்றத்தால் திணறும் தயாரிப்பாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் “கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை” என்ற மிகப் பிரபலமான சீரீயலின் மூலம் மக்களிடையே அறியப்பட்டவர் கவின். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் “தாயுமானவன்”, “சரவணன் மீனாட்சி சீசன் 2” போன்ற சீரீயல்களில் நடித்தார். அவர் சீரீயலில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இளம் பெண்களின் மத்தியில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது.

ஒரு புறம் சீரியல்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த கவின், “பீட்சா”, “இன்று நேற்று நாளை”, “சத்ரியன்” போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் “நட்புன்னா என்னனு தெரியுமா?” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார் கவின். அத்திரைப்படம் சுமாராகவே ஓடியது.

அதனை தொடர்ந்து கவின் ஹீரோவாக நடித்த “லிஃப்ட்” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “லிஃப்ட்” திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடித்த “டாடா” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டுசென்றது. “டாடா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கவின் கோலிவுட்டில் கவனம் பெற்ற ஹீரோவாக மாறினார்.

“டாடா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது “ஸ்டார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின். இதனிடையே “டாடா” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தியுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தன.

“ஹிட் அடித்ததே ஒரு திரைப்படம்தான், அதற்குள் இரண்டு கோடி சம்பளமா” என்று கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுப்புகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது கவின் குறித்து மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது கவின் தற்போது தனது சம்பளத்தை 7 கோடியாக உயர்த்தியுள்ளாராம். கவின் தனது சம்பளத்தை 2 கோடியில் இருந்து 7 கோடிக்கு உயர்த்தியுள்ள செய்தி கோலிவுட் தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Arun

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago