இனி எனக்கும் அவருக்கும் தான் போட்டி.. மஞ்சள் வீரனுக்கு போட்டியாக களம் இறங்கிய You Tube பிரபலம்..

By Ranjith Kumar

Updated on:

2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் instagram ரிலீஸ் மூலமாக பிரபலமானவர்தான் “காத்து கருப்பு கலை”. இவர் வல்கர், என்டர்டைன்மென்ட், விளாக் போன்ற விஷயங்கள் செய்து தமிழ் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா கால முடிந்தபின் ஷார்ட் ஃபிலிம்ஸ், ஆல்பம் சாங்ஸ் போன்ற பல விஷயங்களை செய்து எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறார்.

தற்போது சில காலமாக இவர் வளர்ச்சி மேலும் மேலும் அடைந்து சில படங்களில் நடிக்கப் போகிறார் என்று பல விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் பல பிரபலங்களை யூட்யூப் சேனல் மூலமாக இன்டர்வியூ எடுத்து அதன் மூலம் இவர் மிகப் பிரபலமாக வளர்ந்து விட்டார். இவர் இன்டர்வியூ எடுக்கும் பிரபலங்கள் வீடியோவை பார்ப்பதற்காக போகிய காலம் மாறி, காத்து கருப்பு அடவடியான பேச்சும், நகைச்சுவையான செயலையும் பார்ப்பதற்காக மட்டுமே பல லட்சம் பார்வையாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். இவரின் எதார்த்தமான பேச்சும் எதார்த்தமான நகைச்சுவையும் உடல் மொழியும் இவர் செய்யும் எந்த விஷயத்திலும் கூச்சம் நாச்சம் இல்லாமல் இருப்பதே இவரின் முன்னேற்றத்திற்கு காரணமாகும்.

   

திருச்சி சாதனா, ரவுடி பேபி, ஜி பி முத்து போன்ற முன்னணி இன்ஸ்டா பிரபலங்களுடன் இணைந்து தற்போது வரை பல வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் instagram, youtube போன்ற பல சோசியல் மீடியாக்களில் தனக்கென்று அக்கவுண்ட் வைத்து, அதில் பல வீடியோக்களை பதிவிட்டு பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். தற்போது இவரை வைத்து புதுமுக இயக்குனர் ஒருவர் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரமான கதாநாயகனாக நடிக்க உள்ளாராம், இவருடன் இணைந்து பிரபல நடிகரான “கோதண்டனும்” இணைந்து நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் காத்து கருப்புடன் கோதண்டன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் சிறப்பு ஊட்டு உள்ளாராம். சமீபத்தில் TTF வாசன் அவர்கள் வைத்து மஞ்சள் வீரன் பட இயக்க உள்ளதாக செல்லம் இயக்குனர் தெரிவித்து இருந்தார். அவருக்கு போட்டியாக தற்போது காத்து கருப்பு இறங்கி இருப்பது ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

author avatar
Ranjith Kumar