தமிழில் தல அஜித்குமாருடன் ‘காதல் மன்னன்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. அந்த படத்தில் வரும் ‘உன்னை பார்த்த பின்பு நான்’ பாடல் மிகவும் பிரபலமானது. அதில் ‘மணமகளாய் உன்னை பார்த்த பின்னும் சிறையெடுக்க மணம் துடிக்குதடி” என மானுவை பார்த்து உருகி பாடுவார் அஜித். அந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற நடிகை மானு அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போய்விட்டார். நடிகர் அஜித் உடன் காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை மானுவுக்கு வெறும் 16 வயது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற போது அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் வந்த போதும் அவர் நடிக்கவில்லை. அவர் அப்பொழுது உலகம் முழுவதும் பரதநாட்டிய டூர் சென்றதால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதல் மன்னன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற திரைப்படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மானு.
தற்பொழுது நடிகை மானு திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார்.தனது குடும்பத்துடன் அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா மலேசியாவில் ‘டும் டும் டும்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பட நடிகர்கள் பங்கேற்றனர்.
இதில் நடிகை மானுவும் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘நான் எனது சிறுவயதிலிருந்தே நடிக்க வந்து விட்டேன். இயக்குனர் சரண் மற்றும் நடிகர் விவேக் இருவரும் தான், என்னை நடிக்க அழைத்து வந்தனர்.எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் இல்லாததால், அதன்பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஆனாலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது’ என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…