Categories: CINEMA

சினிமாவில் என்ட்ரி கொடுக்க போகிறாரா தனுஷின் மகன்.. பேரன்களை பற்றி பல சீக்ரெட்களை சொன்ன தாத்தா கஸ்தூரி ராஜா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். வரும் பொங்கலுக்கு அவர் நடித்த கேப்டன் மில்லர் படம், திரைக்கு வர இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவுக்குள் வந்த இவர், இப்போது நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ், தற்போதைய சூழலில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன் மனைவியுடன் பங்கேற்ற தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பல விஷயங்களை மனம் விட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, யாத்ரா, லிங்கா இருவருமே இரண்டு விதமானவர்கள். யாத்ரா அமைதியாக இருப்பார். லிங்கா கமர்ஷியலாக இருப்பார். யாத்ராவின் நடவடிக்கைகள் தனுஷை போன்றதாகவே இருக்கும். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், குழந்தைகளிடம் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை தனுஷிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்.

நான் செல்வராகவன், தனுஷ் ஆகியோரிடம் ஒரு தந்தையாக, பிள்ளைகளிடம் நிறைய இடைவெளி விட்டேன். அவர்கள் மீது அதிக பாசம் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், எங்கே சென்றாலும், தன் குழந்தைகளை தனுஷ் அழைத்துச் செல்கிறார். வெளிநாடுகளில் ஷூட்டிங் என்றால் கூட அவர், ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு தனது மகன்களுடன் செல்கிறார். அப்பா தனுஷ் நடிகர், பெரியப்பா செல்வராகவன் டைரக்டர், தாத்தா நான் டைரக்டர், அவரது தாத்தா ரஜினிகாந்த் நடிகர், அம்மா டைரக்டர் என எல்லோருமே சினிமா, சினிமா என்று இருக்கும்போது தனுஷ் பிள்ளைகளும் சினிமாவில் எதிர்காலத்தில் இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார் கஸ்தூரிராஜா.

Sumathi
Sumathi

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

24 நிமிடங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

26 நிமிடங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

44 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

2 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

3 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago