பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதியாக இந்நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் பற்றிய விவாதம் தான் தற்பொழுது இணையத்தின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. ஹவுஸ்மேட்கள் சொல்வதை கேட்டு தீர விசாரிக்காமல் கமலஹாசன் இந்த முடிவை எடுத்து விட்டார் என்று பலரும் கமலஹாசனை இணையத்தில் கேள்வி கேட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார்.
ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி தீர விசாரித்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டது என கமலஹாசன் கூறிவிட்டார். இதை தொடர்ந்து இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன் மாயா gang-ஐ பார்த்து நீங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானே? என்று கேட்கிறார். உண்மை என்றால் இது ஏன் நடந்தது? அந்த படத்தை போடுங்க என்று கேட்கிறார். அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் பொழுது நீங்க என்ன பண்ணீங்க? என்று கேள்வி கேட்கிறார்.
மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். மறுபடியும் குறும்படத்தை போட்டு காட்டுகிறார். சிவப்பு மஞ்சளா தெரியுறதுக்கு உங்களுக்கு என்ன மாலைக்கண் நோயா? கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே அது உங்க உரிமை தானே என்று கேட்க மாயா, பூர்ணிமா, ஜோவிகா மூன்று பெரும் திருதிருவென முழிக்கின்றனர். நீங்கள் என்னையும் உங்க விளையாட்டுல சேர்த்துக்கிட்டிங்களா என்று கேட்க பூர்ணிமா, மாயா, ஜோவிகாவின் முகத்தை பார்க்கும் பொழுது நமக்கு சிரிப்புதான் வருகிறது. மொத்தத்தில் இன்று இவர்களுக்கு உண்டு கச்சேரி என்பது மட்டும் உண்மை. இதோ பரபரப்பாக வெளிவந்த ப்ரோமோ வீடியோ…
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…