அய்யய்யோ… என்ன இது?… கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரை… செருப்பால் அடித்து துவம்சம் செய்த காஷ்மீரி வீரர்… தாயை அசிங்கமாக திட்டியதால்… வெறிக்கொண்டு தாக்கிய அதிர்ச்சி… இணையத்தில் வீடியோ வைரல்…!

Spread the love

ஸ்ரீநகரில்  நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது கஷ்மீர் வீரர் ஒருவர் பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற ‘ரெட் பிரீமியர் லீக்’ தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், ராயல் குட்வில் அணியும் ஆத்வாஸ் இந்தியா லெவன் அணியும் மோதின. இப்போட்டியில் ஆத்வாஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, மைதானத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அப்போது ராயல் குட்வில் அணிக்காக விளையாடிய பிரபல கஷ்மீரி கிரிக்கெட் வீரர் ஜகாங்கீர் லோன், மைதானத்தில் இருந்த ஒரு பார்வையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து உதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அங்கிருந்த மற்றவர்கள் அவர்களை விலக்கிவிட முயன்றும் வீரரின் ஆத்திரம் அடங்கவில்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு விளக்கம் அளித்துள்ள கிரிக்கெட் வீரர் ஜகாங்கீர் லோன், எதிரணி ஆதரவாளர்கள் தன்னைத் தாழ்த்திப் பேசியதுடன் தனது தாயை அவதூறாகத் திட்டியதாகவும், அதனாலேயே தான் கோபத்தை இழந்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தாய் இகழ்ச்சியை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது என்று அவர் நியாயம் கற்பித்தாலும், விளையாட்டு மைதானத்தில் வீரர் ஒருவர் ரசிகரைக் கையாண்ட இந்த வன்முறைச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

அதிமுகவுக்கு அடுத்த செக்…. தவெகவில் இணையும் 15 எம்.எல்.ஏக்கள்?…. இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி…!

தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…

26 minutes ago

“எங்களுக்கு கரும்புதான் முக்கியம்”…. சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…

38 minutes ago

திடீர் திருப்பம்…. “அந்த 1 முடிவு”… திமுக, பாஜக போட்ட ரகசிய கணக்கு?…. அதிர்ச்சியில் பிரதான கட்சிகள்…. தலைகீழாக மாறும் அரசியல் களம்….!

டிலிமிடேஷன் (தொகுதி மறுவரையறை) விவகாரம் தற்போது இந்திய மற்றும் தமிழக அரசியலில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற…

45 minutes ago

பைக் கடைக்குள் நாகப்பாம்பு…. கழுத்தில் சிக்கிய இரும்பு வளையம்…. ஷாக் ஆன மெக்கானிக்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…..!

இணையத்தில் தற்போது பாம்புகள் தொடர்பான மீட்பு வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம்…

49 minutes ago

ஐயோ… மைதானத்தில் பாய்ந்த கல்… ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நடுவர்… ஈக்வடாரில் பதறவைக்கும் விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…

1 மணத்தியாலம் ago

கம்பியில் சிக்கிய தலை… 12-வது மாடி சுவரில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி… பதறி அடித்து ஓடிவந்த பொதுமக்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜிங் நகரில், 3 வயது சிறுமி ஒருவர் 12-வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்…

1 மணத்தியாலம் ago