சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜிங் நகரில், 3 வயது சிறுமி ஒருவர் 12-வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் பாதுகாப்புச் சட்டகத்தில் தலை மாட்டி வெளியே தொங்கிய பதைபதைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்றோர் வெளியே சென்றிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்ற சிறுமியின் தலை கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது.
உடலின் பெரும்பகுதி நடுவானில் தொங்கிய நிலையைக் கண்ட அண்டை வீட்டார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, கீழே உள்ள வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக நீட்டிக்கப்பட்ட ஸ்டூல் ஒன்றைக் கொண்டு சிறுமியின் உடல் எடையைத் தாங்கிப் பிடித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கதவை உடைத்துச் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி எந்தக் காயமும் இல்லாமல் உயிர் தப்பியது தெரியவந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…
டிலிமிடேஷன் (தொகுதி மறுவரையறை) விவகாரம் தற்போது இந்திய மற்றும் தமிழக அரசியலில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. நாடாளுமன்ற…
இணையத்தில் தற்போது பாம்புகள் தொடர்பான மீட்பு வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம்…
ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…
ஸ்ரீநகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது கஷ்மீர் வீரர் ஒருவர் பார்வையாளரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும்…