கரூர் துயரம்… வெளியான ஷாக் நியூஸ்… விஜய் எடுத்த புதிய அதிரடி முடிவு…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்று வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே சமீபத்திய கரூர் சம்பவம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வர விஜய் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் X தள பக்கத்தில் ஒரு பதிவு, ஒரு வீடியோ மற்றும் ஒரு அறிக்கை மட்டுமே வெளியிட்டார். நிவாரணத் தொகை கூட வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்பட்டது. அவரது இந்த அமைதியான நிலைப்பாடு தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளதாக தெரிகிறது. இது இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் விஜய் காதுக்கு சென்றதால் அதிர்ச்சி அடைந்த அவர், கட்சிப் பணிகளில் மீண்டும் வேகம் காட்ட முடிவெடுத்துள்ளாராம். இதனால் விரைவில் விஜய் களத்தில் இறங்க உள்ளதாக தெரிகிறது.