தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் விஜய் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயர சம்பவம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கொடுத்த மனுவை அவசர வழக்காக உடனே ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் மறுத்துவிட்டார். தமிழக வெற்றி கழகம் சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என கூறியுள்ளார். ஏற்கனவே மக்களை நேரில் விஜய் சந்திக்காதது சர்ச்சையாகி உள்ள நிலையில் உயர்நீதிமன்றமும் இவ்வாறு கூறிவிட்டதால் வெள்ளிக்கிழமை வரை அவர் கரூர் செல்ல வாய்ப்பு இல்லை. இது விஜய் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
