தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. தற்போது நடிகை ஓவியா தன்னுடைய instagram பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கூறி ARREST VIJAY என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயை கைது செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினரும் விஜயை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

