நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. தற்போது 9 மாதங்கள் கடந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த அடுத்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்தாண்டு தீபாவளிக்கே கருப்பு படம் ரிலீஸ் என்று தகவல் வெளியானது. ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக வருகிற பிப்ரவரி 19ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் என்று தகவல் பரவியது.
ஆனால் இப்போது மார்ச் 19ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறிய நிலையில் மீண்டும் ஏப்ரல் 10ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, படத்தை ரூ. 200 கோடி வரை வணிகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதில் டிஜிட்டல் உரிமம் ரூ. 75 கோடி வரை விற்க விலை பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஓடிடி நிறுவனங்களிடம் இன்னும் பேரம் படியாததால் கருப்பு படம் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இது சூர்யா ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.
