Categories: சினிமா

அஜித்துக்கு நான் உதவி செய்ய மாட்டேனா.?… அந்த படமே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் –கருணாஸ் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

#image_title

மேலும்  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் அவர் அரசியல் கட்சி தொடங்கி அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

அவர் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த காலத்தில் அவர் 160 படங்கள்தான் நடித்துள்ளார். ஒரு நகைச்சுவை நடிகருக்கு இந்த எண்ணிக்கைக் குறைவுதான். அதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் நிறையப் படங்களை வேண்டாம் என்று சொல்லியுள்ளேன். சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவுக்கு வட்டிக்கு விட்டு அவரை டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

அதேபோல ஜி படத்தில் அஜித்துக்கு நண்பர் வேடத்தில் நடிக்க கேட்டார்கள். அதில் அஜித் ஜெயிலுக்கு சென்று வந்தபின்னர் அவர் உதவி கேட்க, நான் செய்யமுடியாது என்று சொல்லும் கதாபாத்திரம் என்றார்கள். அதனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால் ஒரு நண்பனுக்கு உதவி செய்யாதவன் எல்லாம் என்ன நண்பன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

6 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

7 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

7 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

7 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

7 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago