திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ளார். கடந்த மார்ச் மாதமே திமுகவின் அனைத்து அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், நடப்பு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் அவரது மகள் மோனிஷா கருணாநிதி, அமைச்சர் என். ஆனந்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே, சற்றுமுன் முன்னாள் எம்.எல்.ஏ கருணாநிதி அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்து முறைப்படி தவெக-வில் ஐக்கியமாகியுள்ளார்; இந்தச் சம்பவம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.