Categories: CINEMA

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனருடன் இணையும் கார்த்தி.. தொடர் தோல்வியால் விழித்துக்கொண்ட ‘பருத்திவீரன்’..

தமிழ் சினிமாவில் கார்த்தி மிக முக்கியமான கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் விஜய் சேதுபதி, திரிஷா அவர்கள் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “96” பட இயக்குனர் “பிரேம்குமார்” அவர்கள் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் பூஜை நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்று தற்போது படப்பிடிப்பு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை சஸ்பென்ஸாக வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். “கோவிந்த் வசந்தா” அவர்கள் இப்படத்தில் இசை அமைக்க, பி.சி ஸ்ரீ ராம் இப்படத்தின் கேமராமேனாக வேலை செய்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளிவிடாமல் சீக்ரெட் ஆக வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் படத்தின் அப்டேட்களை வெளியிடுகிறேன் என்று பிரேம்குமார் தெரிவித்து இருக்கிறார்.

இந்த படம் முழுமையாக முடிந்து ரசிகர்களுக்கு விருந்தாக தீபாவளி சமயத்தில் திரைக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தீபாவளி சமயத்தில் கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” வெளியாகி ஓரளவுக்கு வசூலை பெற்று மக்கள் மத்தியில் நல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன் பின்னதாக கார்த்தியின் 26 ஆறாவது படத்தை “சூது கவ்வும்” இயக்குனர் “நல்லன் கருப்பசாமி” அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார்கள். இப்படம் முழுமையாக முடிவடைந்து, இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

கார்த்தியின் 27வது படமான பிரேம்குமார் அவர்கள் இயக்கத்தில் படத்தை முடித்துவிட்டு, பரியேறும் பெருமாள், மாமன்னன் போன்ற மாபெரும் படைப்புகளை படைத்த “மாரி செல்வராஜ்” அவர்களின் இயக்கத்தில் கார்த்தி இந்த வருட கடைசியில் இருந்து கார்த்திக் 28 வது படத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தியின் இப்படத்தை தயாரித்து 2025 ஆம் ஆண்டு திரைக்கு கொண்டு வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago