Categories: CINEMA

வரிசையாக தோல்வி படங்கள்.. ஆனாலும் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் கார்த்தி.!

கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி சமயத்தில் ராஜ் முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் தான் “ஜப்பான்”. சண்டைக் காதல் காட்சி கலந்த கலவையில் உருவானதாகும். இப்படத்தில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில் மற்றும் விஜய் மில்டன் நடிப்பில் வெளியானது. கார்த்தியின் 25வது படம் என்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது, ஆனால் படம் வெளியாகி திரையில் வந்த பின் மக்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. படத்தின் கதை மிக அற்புதமாக இருந்தாலும், படத்தொகுப்பு மிகவும் ஜவ்வாக இழுத்து சென்றதால் படம் எதிர்பார்ப்பின் நிலையை உடைத்து விட்டது.

கடைசி சில படங்களாக கார்த்தி தோல்வை கொடுத்து வந்தாலும், கார்த்திக்கு அடுக்கடுக்காக படம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில்; தீயா வேலை செய்யணும் குமாரு, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற பல படங்களை இயக்கிய “நல்லன் குமாரசாமி” அவர்கள் இயக்கத்தில் கார்த்தியின் 26வது படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “96”. தற்போது இவர் கார்த்தியின் 27 வது படத்தை தயாரித்து வருகிறார்.

தமிழகத்தில் புரட்சி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் மூன்று படங்கள் தான் இயக்கியுள்ளார், ஆனால் ஒவ்வொரு படமும் மிகத் தனித்துவமாக இருக்கும். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்றவையாகும். தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படம் முடிந்தவுடன் கார்த்தி உடன் இணைந்து கார்த்தி 28 வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரும்புத்திரை, சர்தார் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் “பி.எஸ் மித்ரன்”. தற்போது கார்த்தி அவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் வரிசையான படங்களை முடித்துவிட்டு, கார்த்தி 29 படமானது பி.எஸ் மித்ரன் அவர்கள் தான் இயக்க உள்ளார். இப்படம் 2025 ஆம் ஆண்டு கடைசியில் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன் பின்னதாக இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுடன் கார்த்தி இணை உள்ளாராம். கிட்டத்தட்ட இந்த கூட்டணி 10 வருடம் கழித்து இணைகிறது, 2014 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த படம் தான் “மெட்ராஸ்”. இப்படம் திரையில் மாபெரும் எதிர்பார்ப்பை பெற்றது, அதன் பின் 10 வருடம் கழித்து தற்போது தான் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைகிறது. கார்த்திக், அஜித் வைத்த இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் அவர்கள் கார்த்தியின் 31 வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணியில் தீபாவளி சமயத்தில் வெளிவந்த படம் தான் “கைதி”. இப்படம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வந்து அதிரி புதிரியாக திரையரங்கையே தெறிக்க விட்டது. இப்படத்தின் கலெக்ஷன் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்டது என்று கூறலாம். ஹீரோ ஒரே இரவில் மூன்று ரவுடி கும்பல்களிடமிருந்து போலீசை காப்பாற்றுவதே, இப்படத்தின் கதையாகும். இதுவரை இல்லாத புதுவிதமான கதையும் கதைகளமும் இப்படத்தின் பெரிய பலம் என்றே கூறலாம். தற்போது நான்கு வருடம் கழித்து லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் கூட்டணி அமையுள்ளது. இவர்களின் காம்போ ரசிகர் மத்தியில் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago