Categories: சினிமா

நீச்சல் உடையிலிருந்து புர்காவிற்கு மாற காரணம் என்ன…? சினிமாவை விட்டு விலகியது குறித்து நடிகை மும்தாஜ் ஓபன் டாக்…

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி, சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக விஜயுடன் ‘குஷி’ திரைப்படத்தில் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒருவழி செய்தார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நடிப்பில் இறுதியாக 2009இல் ‘ராஜாதி ராஜா’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்பொழுது நடிகை மும்தாஜ் முழுவதுமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்று வந்து முழு இஸ்லாமிய பெண்ணாக மாறியுள்ளார். சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். மேலும் எப்பொழுதும் புர்கா மற்றும் இஸ்லாமிய உடையிலும் காணப்படுகிறார்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறியிருந்தார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது,  ‘ நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும்.  ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் தொடங்கியது. அதன் காரணமாக தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம். ஒருநாள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது நானே என்னை அறியாமல் என் உடையை சரி செய்தேன். வெளியே செல்லும்போது கண்ணியமாக உடை அணிந்தேன். சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட உடை அணிவது நிச்சயம் எல்லோருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.’ என்று மனம் திறந்து பேசியிருந்தார் மும்தாஜ்.

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

9 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

9 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

9 மணத்தியாலங்கள் ago