“தமிழகத்திற்கு ரெட் கார்ட்”…. எல்லைக்கே வராதீர்கள் விஜய்…. கர்நாடக முதல்வர் திடீர் எச்சரிக்கை…. உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மீண்டும் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தமிழகத்தின் குருவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைகளுக்காகக் காவிரியில் உரிய தண்ணீரைத் திறக்கக் கோரியும், மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவும் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த பெங்களூரு பயண அறிவிப்பு வெளியானது. பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் சாய் குமார், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாஹூ மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் உட்பட 13 பேர் கொண்ட பலமான தூதுக்குழுவையும் தமிழக அரசு அமைத்திருந்தது. இரு மாநில நதிநீர் விவகாரத்தில் அமைதியான மற்றும் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்பட்டது.

   

இருப்பினும், எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் அரசியல் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, “தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் அரசு விருந்தினர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தற்போதைய உணர்வுப்பூர்வமான சூழலில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்படத் தேவையில்லை என்றும், சூழல் தணிந்த பிறகு உரிய நேரத்தில் சந்தித்துப் பேசலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

கர்நாடக முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த உயர்மட்டக் குழுவின் பெங்களூரு பயணம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குத் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை விழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.