தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி தனது முதல் படமான ஜெயம் திரைப்படத்தின் வெற்றியாள் அப்படத்தின் பெயரையே தனது ரவி என்ற பெயருக்கு முன்பு வைத்து ஜெயம்ரவியாக இது நாள் வரை ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் கடந்த வருடத்திலிருந்து ஜெயம் ரவி சினிமா மற்றும் சொந்த விஷயத்தில் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளார். இப்படியான நிலையில் சினிமாவில் ஜெயம் ரவியாக அழைக்கப்பட்ட வந்த தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார். அதோடு இந்த வருடத்திலிருந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுக்கும் முயற்சியிலும் அவர் உள்ளார்.
ரவி மோகன் என்ற பெயர் மாற்றப்பட்ட நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதில் இந்த திரைப்படத்தின் டைட்டில் “கராத்தே பாபு” என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் நாசர், எதிர்க்கட்சித் தலைவர் கேரக்டரில் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கேரக்டரில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ள நிலையில், பெயர் குறித்த நீண்ட விளக்கத்தை முதலமைச்சர் நாசர் விளக்கிய நிலையில் அதற்கு பதிலளித்த ரவி மோகன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அதுதான் கராத்தே மணி என்று ஆவேசமாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை கொஞ்சம் வித்தியாசமாக ஜெயம் ரவி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…