Categories: சினிமா

கரண் இப்போது எங்கே இருக்கிறார்.. எப்போது சினிமாவில் ரி எண்ட்ரி… பிரபலம் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில், குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு இடத்தில் இருந்தவர் நடிகர் கரண். குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் தியாகராஜன் நடித்த தீச்சட்டி கோவிந்தன் தமிழில் இவரது முதல் படம். அந்த படத்தில் அவர் உதவியாளராக தோன்றினார். பின்னர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் சரத்பாபுவின் மகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு நடித்த நம்மவர் திரைப்படம்தான் அவரை பிரபலம் ஆக்கியது.

நம்மவர் படத்தில், கமலை எதிர்க்கும் ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க கமல், கரணுக்கு வாய்ப்பளித்தார். நம்மவர் படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா, கண்ணெதிரே தோன்றினாள் என 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். நம்மவர், காதல் கோட்டை, கண்ணாத்தாள், காதல் மன்னன் என பல படங்கள் அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

2006 ஆம் ஆண்டு வெளியான கொக்கி மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர்  ஆகிய இரு படங்களும் அவரை ஹீரோவாக்கின. கருப்பசாமி குத்தைகதாரர் திரைப்படம் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

அதனால் அவர் திரும்ப வில்லன் வேடத்திலும் நடிக்கவிரும்பாமல் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இதுபற்றி சமீபத்தில் வெளியான தகவலின் படி கரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாராம்.

இந்நிலையில் முன்னணி சினிமா பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமணன் தான் கரணிடம் சமீபத்தில் பேசியதாகக் கூறியுள்ளார். அதில் “கரண் என்னிடம் சமீபத்தில் பேசினார். கண்டிப்பாக சினிமாவில் நடிக்க வருவேன். நல்ல கதைக்காகக் காத்திருக்கிறேன் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

57 minutes ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago