இதெல்லாம் ஒரு பொழப்பா?… சுதந்திர தின விழாவில் பள்ளி… நிர்வாகத்தை நார்நாராக கிழித்த கபில் தேவ் ரௌத்திரம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், சுதந்திர தின விழாவிற்காக பள்ளி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்றபோது, அங்கு நிலவிய கடும் ஒழுங்கீனம் மற்றும் மோசமான ஏற்பாடுகளால் கோபமடைந்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழாவில் போதுமான காற்றாடி வசதிகள் இல்லாமலும், உரிய கால அட்டவணை மற்றும் திட்டமிடல் இன்றியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதோடு, உண்மையான நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல் வெறும் புகைப்படங்கள் எடுப்பதிலேயே ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தியதால் கபில் தேவ் மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

   

மேடையில் பேசிய அவர், “வெறும் புகைப்படங்கள் எடுப்பதற்குத்தான் என்னை அழைத்தீர்கள் என்றால் அதை முன்பே சொல்லியிருக்கலாம்; அதற்குத் தனியாக நேரம் ஒதுக்கியிருப்பேன்” என்று காட்டமாகக் கூறினார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் பள்ளியிலேயே இத்தகைய அவலநிலை இருப்பது கவலையளிப்பதாகவும், ஆசிரியர்களும் நிர்வாகமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.