டேய் கிழவா என்ன நினைச்சிட்டு இருக்கேன்னு கேட்டாங்க.. பில்கேட்ஸ் ரஜினிய வச்சு ஏன் படம் எடுக்கல? டாக்டர் காந்தராஜ் பேசிய வீடியோ வைரல்..!!

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

பிரபல இயக்குனரான நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற சிறை கண்காணிப்பாளரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

   

மேலும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, வசந்த் ரவி யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த நிலையில் டாக்டர் காந்தராஜ் பேசிய பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, ரஜினியோட ஜெயிலர் படம் பற்றி நான் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். படம் ரிலீஸ் ஆன மூன்றாவது நாள்ல வரலாறு காணாத வெற்றி.

   

 

மூணாவது நாளிலேயே 300 கோடி வசூல் அப்படின்னு போட்டாங்க. அதை பத்தி என்கிட்ட கேள்வி கேட்டாங்க. அப்போ நான், 3 நாளில் 300 கோடி வசூல் ஆச்சு அப்படின்னா பில்கேட்ஸ் போன்றவர்கள் எல்லாம் ரஜினி வச்சு படம் எடுத்து கோடீஸ்வரன் ஆகி இருப்பாங்க. எதுக்கு தொழிற்சாலை, கப்பல் கம்பெனி ஆரம்பிச்சி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. ரஜினிய பிக்ஸ் பண்ணிட்டா ஆயிரம் கோடி வசூல் ஆகிடுமே?

 

5 நாள் ஓடுச்சுனா அது ஆயிரம் கோடிக்கு மேல தான் வசூல் பண்ணுமே? அவங்க ஏன் படம் எடுக்கல? அப்படின்னு கேட்டேன். இத பத்தி நான் பேசுனதுக்கு டேய் கிழவா என்ன நெனச்சிட்டு இருக்க. தலைவரை பத்தி பேசுறியான்னு கமெண்ட் பண்ணாங்க. அப்ப நான் சொன்னேன். அப்புறம் ஏன் இந்த படம் போயிருச்சு. நாலு நாள் 5 நாள் கழிச்சு படத்தை காணோம். அஞ்சாவது நாள் ஓடிடில வந்துருச்சு. அவ்வளவு வசூல் ஆன படம் எதுக்கு ஓடிடி போயிடுச்சுன்னு கேட்டேன் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.