#image_title
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம்.
இத்தனை திறமைகள் அவரிடம் இருந்தும் அவரிடம் இருந்த சில தீயப் பழக்கங்களால் அவர் தன்னுடைய 56 வயதிலேயே உயிரிழந்துவிட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவருக்கிருந்த போதைப் பழக்கம்தான். விடிய விடிய குடித்துவிட்டு மறுநாள் காலை லேட்டாகக் கம்போசிங் செல்வது அவரின் வழக்கம்.
இப்படி ஒரு சம்பவம் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் கம்போசிங்கின் போதும் நடந்துள்ளது. அந்த படத்துக்காக ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர். சில பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்ட பின்னர் அடுத்த பாடலை நாளைக் காலை வைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். அதனால் எம் எஸ் வி தன்னறைக்கு தூங்க சென்றுள்ளார்.
ஆனால் அடுத்த அறையில் கண்ணதாசன் தன் நண்பர்களோடு குடியும் கும்மாளமுமாக இருந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியான எம் எஸ் வி அவரிடம் “நாளைக்கு கம்போசிங் இருக்கு. இப்படி பண்ணா காலைல லேட்டாகிடுமே.” என கோபப்பட்டுள்ளார். அதற்கு கண்ணதாசனோ “நீ இயக்குனரிடம் சொல்லாதே. நான் காலையில் சீக்கிரமே வந்துவிடுவேன்” என சமாதானம் சொல்லி அனுப்பியுள்ளார்.
ஆனால் மறுநாள் காலை அவர் வர தாமதம் ஆக எம் எஸ் வி நடந்ததை எல்லாம் இயக்குனர் ஸ்ரீதரிடம் போட்டுக் கொடுத்துள்ளார். அதைக் கேட்டு கோபமான ஸ்ரீதர் கண்ணதாசனிடம் கோபப்பட்டுள்ளார். அதன் பிறகு பாடல் கம்போசிங் ஆரம்பித்த போது கண்ணதாசன், எம் எஸ் வி வேல் இருந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் பாடலின் சூழ்நிலைக்கு ஏற்ப வரிகள் எழுதும் விதமாகவும் “சொன்னது நீதானா சொல் சொல்” என்று சிலேடையில் பாடலை எழுதி அசத்தியுள்ளார். பாடல் வரிகளை கேட்ட எம் எஸ் வியும் ஸ்ரீதரும் சிரித்தே விட்டார்களாம்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…