Categories: சினிமா

கவிப்பேரரசுன்னு சும்மாவா சொல்றாங்க… இந்த பாட்டுல இப்படி ஒரு நுட்பத்த பயன்படுத்தி இருக்காரா?… கேக்க கேக்க ஆச்சர்யமா இருக்கே!

Spread the love

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.

50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம்.

எம் ஜி ஆர், தேவிகா நடித்து ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆனந்த ஜோதி’. இந்த படத்துக்கு எம் எஸ் வி மற்றும் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுதிய காதல் டூயட்தான் ‘பனியில்லாத மார்கழியா’. இந்த பாடல் இன்றுவரை கேட்டு ரசிக்கப்படும் ஒரு மெல்லிசை பாடல்.

இந்த பாடலில் கதாநாயகனும் கதாநாயகியும் மாறி மாறி காதலை வெளிப்படுத்துவது போல பாடுவர். அவர்கள் நேரடியாக பாடுவது போல இல்லாமல் கேள்விகளை கேட்டுக்கொள்வது போல பாடல் வரிகளை உருவாக்கி இருப்பார்  கண்ணதாசன. அதாவது பனியில்லாத மார்கழியா என்ற கேள்வியிலேயே ‘மார்கழி என்றால் பனி இருக்கும்தானே’ என்ற பதிலும் இடம்பெற்றிருக்கும்.

இப்படி பாடல் முழுவதும் கேள்விகள் போலவும் அதற்குள்ளாகவே பதில்கள் இருப்பது போலவும் எழுதி இறுதியில் இவையணைத்தும் ‘பருவம் செய்யும் கதையல்லவா’ என முடித்திருப்பார். இந்த பாடலை பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் சிலாகித்துள்ள ஆலங்குடி வெள்ளைச்சாமி இதுபோன்ற யுக்தியில் தமிழில் பாடல்களே வந்ததில்லை எனப் பேசியுள்ளார்.

பாடல் வரிகள்:-

 

பல்லவி

பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவரா

பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவரா

இனிப்பில்லாத முக்கனியா

இசையில்லாத முத்தமிழா

இனிப்பில்லாத முக்கனியா

இசையில்லாத முத்தமிழா

பனி இல்லாத மார்கழியா

படை இல்லாத மன்னவரா…

சரணம் 1

அழகில்லாத ஓவியமா

ஆசை இல்லாத பெண் மனமா

அழகில்லாத ஓவியமா

ஆசை இல்லாத பெண் மனமா

மழை இல்லாத மாநிலமா

மலரில்லாத பூங்கொடியா

மலரில்லாத பூங்கொடியா

சரணம் 2

தலைவனில்லாத காவியமா

தலைவியில்லாத காரியமா

தலைவனில்லாத காவியமா

தலைவியில்லாத காரியமா

கலையில்லாத நாடகமா

காதல் இல்லாத வாலிபமா

காதல் இல்லாத வாலிபமா

சரணம் 3

நிலையில்லாமல் ஓடுவதும்

நினைவில்லாமல் பாடுவதும்

நிலையில்லாமல் ஓடுவதும்

நினைவில்லாமல் பாடுவதும்

பகைவர் போலே பேசுவதும்

பருவம் செய்யும் கதையல்லவா

பருவம் செய்யும் கதையல்லவா

 

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

9 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

9 மணத்தியாலங்கள் ago