Categories: சினிமா

அந்த வார்த்த ரொம்ப முக்கியம்… வாலிக்கு கண்ணதாசன் சொன்ன அட்வைஸ்!

Spread the love

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்களில் உச்சபட்ச புகழைப் பெற்றவர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள்தான். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன் அளவுக்கு புகழ்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவும் அவர் பாடல்கள் கொண்டாடப்பட்டு, அவர் நினைவு கூறப்படுகிறார்.

கண்ணதாசனின் பாடல்கள் உச்சத்தைத் தொட்டாலும் அவரை உட்கார வைத்துப் பாடல்கள் எழுதி வாங்குவதும் கடினமான ஒன்று. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொன்ன நேரத்தில் அவர் பாடல்கள் எழுத வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வந்துவிட்டால் பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுதான் போவார்.

கண்ணதாசன் சினிமாவில் தீவிரமாக இயங்கிய போதே அரசியலிலும் அவர் செயல்பட்டு வந்தார். முதலில் திமுகவில் இருந்த கண்ணதாசன், அங்கு அண்ணாவோடு ஏற்பட்ட கருத்து  வேறுபாட்டால் காங்கிரஸுக்கு சென்றார். பின்னர் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது இந்திரா காங்கிரஸில் இணைந்தார். பின்னர் எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்த போது அவர் அரசவையில் கவிஞராக செயல்பட்டார். அரசியல் வாழ்க்கை அவருக்கு நேர்ம்றையாக அமையவில்லை என்றாலும், அதனால் எப்போதும் அவரின் பாடல் ஆசிரியர் வாழ்க்கைக்கு பங்கம் வந்ததில்லை.

அதே போல கண்ணதாசன் தன்னுடைய சக பாடல் ஆசிரியர்களோடு மிகவும் நட்பாக இருந்தவர். அதற்கு உதாரணம் அவரின் போட்டியாளராகக் கருதப்பட்ட வாலி அவர்களுடனான அவரது நட்பு. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் ஒருவர் பாடலைப் பற்றி இன்னொருவர் கருத்து சொல்வதும் அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் ஒன்று.

இந்நிலையில் வாலிக்கு கண்ணதாசன் ஒரு முக்கியமான அட்வைஸை வழங்கினாராம். அது என்னவென்றால் டைட்டில் கார்டுல் ‘பாடல்கள் –வாலி’ என்று போட்டுக்கொண்டிருந்த வாலியிடம் “பாடல்கள்- கவிஞர் வாலி” என்றுதான் போடவேண்டும் என்று கண்டிப்புடன் சொன்னாராம். அதன் பின்னரே வாலி அப்படிப் போட சொல்லி தயாரிப்பாளர்களிடம் சொல்ல ஆரம்பித்தாராம்.

vinoth

Recent Posts

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

11 seconds ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

8 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

12 minutes ago

“ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி”… கோடை விடுமுறை அறிவிப்பில் செக் வாய்த்த பள்ளிக்கல்வித்துறை…!

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…

17 minutes ago

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

30 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

36 minutes ago