கண்ணதாசனின் ஒரே ஒரு கேள்வியால் ஹிட்டான நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம்.. சுவாரசியமான தகவல் உங்களுக்காக..!!

By Priya Ram on ஏப்ரல் 3, 2024

Spread the love

இயக்குனர் ஶ்ரீதர் கடந்த 1962-ஆம் ஆண்டு நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முத்துராமன், தேவிகா, கல்யாணகுமார், வி.எஸ் ராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. படத்தில் கல்யாண் குமாருக்கும் தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் விதி காரணமாக தேவிகா முத்துராமனை திருமணம் செய்து கொள்கிறார். முத்துராமனின் உடல் நிலையை சரி செய்ய தேவிகா மருத்துவமனைக்கு செல்கிறார்.

   

அங்கு அவரது முன்னாள் காதலரான கல்யாண்குமார் தான் மருத்துவராக இருக்கிறார். இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் கண்ணதாசன் வரிகள் கூடுதலாக சிறப்பு சேர்த்தது. முன்னதாக ஸ்ரீதர் கண்ணதாசிடம் கதையை விளக்கி கூறுகிறார். அப்போது கணவன் தான் இறந்த பிறகு தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள சொல்வதும், அதே கணவன் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் தன் மனைவியை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்பதும் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறுகிறார்.

   

 

உடனே ஸ்ரீதர் தனது புரட்சிகரமான கருத்து படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நன்றாக யோசித்து ஒரு புதிய காட்சியை சேர்த்தாராம் . அதாவது நான் இறந்த பிறகு நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என கணவன் தனது மனைவியிடம் கூறுகிறார். உடனே மனைவி அழுது கொண்டே ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கணவன் தன்மகள் இள வயதிலேயே விதவை ஆனால் அவரது பெற்றோர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா மறுமணம் செய்து வைக்கத்தான் முற்படுவார்கள்.

அதே போலத்தான் தன் தங்கை விதவை ஆனால் ஒரு அண்ணன் இந்த காரியத்தை செய்வான். அப்படித்தான் நானும் ஒரு கணவனாக உனக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறேன் என அந்த காட்சியில் கூறியுள்ளார். அதனை பார்த்துவிட்டு படம் நிச்சயமாக வெற்றி பெறும் எனக்கு கூறினார். அதேபோல எதிர்பார்த்ததை விட படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. கண்ணதாசன் அந்த கேள்வியை கேட்டதால் தான் ஸ்ரீதர் ஒரு புதிய காட்சியை எடுத்துள்ளார். அந்த காட்சி இல்லை என்றால் படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பது சாத்தியமில்லை.