Categories: சினிமா

இறந்தபின்பு செய்ய முடியாததை MGR-க்கு உயிரோடிருக்கும் போது செய்த கண்ணதாசன்… உருகிய MGR…

Spread the love

கண்ணதாசன் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். 1943 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையில் ஆசிரியர் பணிக்கு சென்ற போது தனது பெயரை கண்ணதாசன் என்று வைத்துக் கொண்டார்.

கம்பரின் செய்யுளிலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன். தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும் கவிஞராகவும் திகழ்ந்தவர். 4000த்ற்கும் மேற்பட்ட கவிதைகள், 5000துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், பல கட்டுரைகளை எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை,கண்ணதாசன், ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்தவர். மேலும் சாகித்ய அகாடமி விருதை வென்றவர்.

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தது போலவே தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தவர் கவியரசு கண்ணதாசன். இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டம் அது. எம்ஜிஆர் அவர்கள் கவியரசு கண்ணதாசன் மீது அதிக மரியாதையும் பாசத்தையும் வைத்திருந்தார். அதனால் கவியரசு கண்ணதாசன் அவர்களை அரசவை கவிஞராக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது.

அதை ஒரு கட்டத்தில் செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த எம்ஜிஆர், கண்ணதாசனுக்கு அலைபேசியில் அழைத்தார். அப்போது எதிர் முனையில் கண்ணதாசன் வெளியூர் சென்றிருக்கிறார் என்று பதில் வரவே, உடனே அவரை இங்கு வந்து என்னை பார்க்க சொல்லுங்க என்று சொல்லிவிட்டு எம்ஜிஆர் அலைபேசியை துண்டித்து விட்டார். ஐயோ எம்ஜிஆர் என்னை அவசரமாக வரச் சொல்கிறார் என்னவோ தெரியவில்லையே என்று அவசர அவசரமாக கண்ணதாசன் ஊருக்கு வந்து எம்ஜிஆரை சந்திக்க சென்றார்.

எம்ஜிஆரை சந்திக்க சென்ற கவியரசு கண்ணதாசனிடம், எம்ஜிஆர் தனது விருப்பத்தை தெரிவித்தார். நான் உங்களை தமிழக அரசின் அரசவை கவிஞராக நியமனம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களிடம் நான் அனுமதி கேட்கவில்லை, உங்கள் வாயிலிருந்து சம்மதம் என்ற வார்த்தை மட்டும்தான் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். இதனை அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் கவியரசு கண்ணதாசன்.

சிறிது காலத்துக்கு பின்பு ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவியரசு கண்ணதாசன், எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் மீது உள்ள பாசத்தினால் என்னை அரசவை கவிஞராக நியமித்து அழகு பார்த்தார் எம்ஜிஆர். நான் அரசவை கவிஞர் ஆனதால் நான் இறந்த பிறகு அரசு மரியாதை கிடைக்கும். ஆனால் அப்போது நன்றி சொல்ல நான் உயிரோடு இருக்க மாட்டேன். அதனால் என்னை அரசவை கவிஞர் ஆக்கியதற்காக எம்ஜிஆர் அவர்களிடம் என் தலை வணங்கி இப்போதே நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று பேசி உள்ளார் கண்ணதாசன். அதை கேட்ட எம்ஜிஆர் மனமுருகி போய்விட்டார். இதிலிருந்து எம்ஜிஆர் அவர்களும் கண்ணதாசனும் எவ்வளவு நெருக்கமானவர்கள் எத்தனை அன்பை பரிமாறிக் கொண்டார்கள் என்பது தெரிகிறது.

admin

Recent Posts

இதோ ஆதாரம்!… “என் கார் மேலயே இடிப்பியா?”… டேஷ்கேம் செய்த மேஜிக்… அபாண்டப் பழி… தப்பு பண்ணிட்டு சீன் போட்ட டிரைவர்…!!

தலைநகர் டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து, கவனக்குறைவான ஓட்டுதலால் ஏற்படும் ஆபத்தை வெளிச்சம்…

5 minutes ago

திக்… திக்… திக்… விபத்தை ஏற்படுத்திய போதை இளைஞர்கள்?… பூங்காவிற்குச் சென்ற தாய்-மகள் மீது ஏறிச் சென்ற கார்… ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்…!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஜாட் பவன் அருகே அமைந்திருக்கும் தேவிலால் பூங்காவிற்குத் தாயும் மகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது…

9 minutes ago

திடீரென சுருண்டு விழுந்தது ஏன்?… மணப்பெண் மர்ம மரணம்… கதறாத கணவன்… ஹோட்டல் CCTV-யில் பதிவான பயங்கரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன 28 வயது இளம்…

15 minutes ago

ரயில்கள் ஸ்தம்பித்ததால் தண்டவாளத்தில் நடந்த கல்லூரி மாணவர்… திடீரென மோதி தூக்கி வீசிய ஏசி ரயில்… அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்… பகீர் சம்பவம்…!!

மும்பையில் சிக்னல் கோளாறு மற்றும் தீ விபத்து காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் பல மணி நேரம் ஸ்தம்பித்ததால், தண்டவாளத்தில்…

16 minutes ago

கடவுளே… என்ன ஆச்சு?… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… பிரதான சாலையில் ஒரு வினாடி அவசரம்… தூக்கி எறியப்பட்ட ஸ்கூட்டர்ஓட்டுநர்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

மத்தியப் பிரதேசத்தின் தமோ பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் சாலை விபத்துகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பிரதான…

18 minutes ago

இன்னும் 4 பேர் தான்!… சினிமா பாணியில் தப்பிய கைதிகள்… வானத்தில் பறந்த ட்ரோன்கள்… அடுத்தடுத்து சிக்கிய 8 பேர்… போலீஸ் வலைவீச்சு…!!

தேனி கிளைச் சிறையின் சுவரை ஏறிக்குதித்துத் தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. அடர்ந்த புதர்கள்…

23 minutes ago