#image_title
பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜு நடிப்பில் கடைசியாக பிரேமலு திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வாவை வைத்து லைக்கா நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்குகிறார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். மேலும் புறநானூறு படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜுவை கமிட் செய்துள்ளனர். படப்பிடிப்பை USA வில் நடத்த திட்டமிட்டு மமிதா பைஜுவுக்கு விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை பட குழுவினர் செய்து வந்தனர்.
இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்ட நிலையில் மமிதா பைஜுவிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். பட குழுவினர் எப்படியோ மமிதா பைஜுவின் சகோதரரை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார். காரணம் என்னவென்றால் தளபதி விஜய் நடிக்கும் 69-ஆவது படத்தில் மமிதா பைஜு நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
தளபதியின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். தற்போது பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. விஜய் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என்பதால் மமிதா பைஜு அதர்வா படத்தில் இருந்து விலகியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…