மும்பையில் சிக்னல் கோளாறு மற்றும் தீ விபத்து காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் பல மணி நேரம் ஸ்தம்பித்ததால், தண்டவாளத்தில் இறங்கி நடந்த 22 வயது பி.காம் கல்லூரி மாணவர் சாஹில் திதே ஏசி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தானேயில் உள்ள கணினிப் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பண்டூப் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் சாஹில் காத்திருந்தபோது, ரயில் வரும் நடைமேடை மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. தாமதமாக வந்துகொண்டிருந்த ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, அதிவேகமாக வந்த ஏசி லோக்கல் ரயில் சாஹில் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்னதாகக் கஞ்சூர்மார்க் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு மற்றும் மின்சாரக் கம்பிப் பழுதினால் ரயில்கள் பல மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பொறுமையிழந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தில் சாஹில் திதே தவிர மேலும் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே தன் மகனின் மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள சாஹிலின் குடும்பத்தினர், அரசு நிவாரணமும் குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…