எங்களை பிரிக்காதீர்கள்..! இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்” – கனிமொழி எம்.பி.

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், “இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன உதவி செய்கிறது? ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக.

ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.  தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை. தமிழன் கங்கையை வெல்வான். கங்கை கொண்ட சோழன் கங்கையை வென்றவன். ஆபரேஷன் சிந்தூர நடவடிக்கையின் போது இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.