“அண்ணாமலைக்கு பயம் வந்துடுச்சு.. அதான் ஓடி ஒளிஞ்சுகிட்டாரு”… பாஜகவை நக்கல் செய்த கனிமொழி… பரபரக்கும் அரசியல் களம்…!!

By Muthu Mani on சித்திரை 8, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையில் வானதி சீனிவாசனுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை போட்டியிடாததை அவரே உறுதி செய்துள்ளார். 2021 மற்றும் 2024 தேர்தல்களில் சந்தித்த தோல்விகள் மீண்டும் தொடர்ந்தால் தனது அரசியல் பிம்பம் பாதிக்கப்படும் எனக் கருதி அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டாரா என்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன. இதற்கிடையே, புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென டெல்லிக்குச் சென்றது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் கசிந்து வருகின்றன. இருப்பினும், கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் அண்ணாமலையையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற அச்சத்தின் காரணமாகவே அண்ணாமலை போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனிமொழி, திமுக தேர்தலைக் கண்டு ஒருபோதும் பயப்படவில்லை என்றார். மேலும், வெற்றி நமதே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் திமுக தேர்தல் களத்தில் பணியாற்றி வருவதாகவும், பயம் என்பது பாஜக தரப்பில்தான் குடி கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.