“சீனியர்களுக்கு கல்தா?”… உதயநிதியின் கையில் புது லிஸ்ட்…. கனிமொழிக்கு காத்திருக்கும் அந்த ஒரு பதவி… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்…!

Spread the love

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக அடிமட்ட அளவில் பலப்படுத்துவதற்கான மறுசீரமைப்புப் பணிகள் அறிவாலய வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. முதற்கட்டமாக தொகுதி வாரியாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்டப் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், எழிலன் நாகநாதன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் அடங்கிய புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது விரிவான பரிந்துரை அறிக்கையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல்வரிடம் சமர்ப்பிக்கவுள்ளது. லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் திரும்பியதும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள திமுகவின் பாரம்பரியமிக்க முப்பெரும் விழாவிற்குப் பிறகு, இந்த மறுசீரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி மாற்றங்களில், தற்போதைய துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழி எம்பி-க்கு முக்கியப் பொறுப்பு வழங்கி ‘புரோமோஷன்’ செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மிக முக்கியப் பதவிகளில் ஒன்றான பொதுச்செயலாளர் பதவிக்கு கனிமொழியின் பெயர் பலமாக அடிபடுகிறது. சமீபத்தில் அவர் பொதுச்செயலாளர் துரைமுருகனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்று ஆசி வாங்கியதும், இந்தத் தகவலுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

மறுபுறம், கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். குறிப்பாக, சீனியர் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பெரிய மாவட்டங்களைப் பிரித்து, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதியவர்களின் அனுபவமும், இளைஞர்களின் வேகமும் இணைய வேண்டும் என்ற நோக்கில், சில தொகுதிகளைப் பிரித்து புதிய இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க உதயநிதி தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பின்னணியில் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே அண்மைக்காலமாகத் தொடர் ஆலோசனைகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்குகின்றன. சீனியர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல், அதே நேரத்தில் வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியைப் புதுப்பிப்பதே இந்த ஆலோசனைகளின் முக்கிய நோக்கம் ஆகும். செப்டம்பர் முப்பெரும் விழாவிற்குப் பின் வெளியாகவுள்ள இந்த அறிவிப்புகள், திமுகவின் எதிர்கால அரசியல் பாதையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

6 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

21 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

28 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

40 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago