ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கனிமொழி எம்.பி., அதிமுக – பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கவே இந்தத் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜகதான் என்றும், அமித்ஷா சொல்வதைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி கைகட்டி நிற்பதாகவும் விமர்சித்தார். மேலும், ஒன்றிய பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே புறக்கணிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கும் கூட்டணியாக இது இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் ஜெயலலிதாவால் மறுக்கப்பட்ட ‘உதய்’ மின் திட்டம் போன்றவற்றைக் கனிமொழி நினைவு கூர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நாடகமாடிய பழனிசாமி, தற்போது மீண்டும் அவர்களுடன் இணைந்திருப்பதை விமர்சித்த அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநிலத் தலைவர்களின் கதி என்ன ஆனது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார். குறிப்பாகப் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் நிலையை உதாரணமாகக் காட்டி எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“எடப்பாடி பழனிசாமி அவர்களே, பார்த்துப் பத்திரமாக இருங்கள்; தேர்தலுக்குப் பிறகு உங்களை ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்பி விடுவார்கள்” என எள்ளி நகையாடிய கனிமொழி, இந்தத் தேர்தலை ஒரு சித்தாந்தப் போராக வர்ணித்தார். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான கீழடிக்கும், வட இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூருக்கும் இடையிலான போராட்டமே இது என்று குறிப்பிட்ட அவர், தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படும் சக்திகளை மக்கள் முறியடிக்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…