தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் சூர்யா. 1998 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சூர்யா அதற்குப் பிறகு பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு இந்த படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.
இந்நிலையில் படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இனி காண்போம். சூர்யா ரசிகர்களுக்கு ஏற்றவாறு சூர்யா டைட்டில் கார்டு மிகவும் தனித்துவமாக இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஹாஃப் மிக பிரம்மாண்டமாக விறுவிறுப்பாக செல்கிறது. இன்டர்வல் போர்ஷனும் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
இது ஒரு ஃபிளாஷ்பேக் கதை போல தான் தற்காலத்திலும் முந்தைய காலத்தில் நடக்கிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதில் வரும் சிறுவன் முழுமையாக நடித்திருக்கிறாரா என்பதை பற்றி கூற முடியவில்லை. அடுத்ததாக இந்த படத்தில் ஹைலைட்டாக வருவது சூர்யாவுக்கும் ஒரு முதலைக்கும்மான Fight Sequence. அது தியேட்டரில் பார்க்கும்போது விஷுவல் கிராண்டியராக மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இதுவரை இது போல் ஒரு காட்சியை கண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.

இறுதியாக கிளைமாக்ஸ் இல் சூர்யாவின் சிக்ஸ் பேக் Revealலும் கார்த்தி Cameo பண்ணியிருப்பது Double Dhamaka என்பது போல விருந்தாக இருக்கிறது. மொத்தத்தில் தியேட்டரில் கண்டு ரசிப்பதற்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக கங்குவா இருக்கிறது. ஆனால் முழுமையாக பார்வையாளர்களை திருப்திபடுத்தியதா என்றால் ஒரு சில இடத்தில் கதை Narration இல் Lag ஆகத்தான் இருக்கிறது. மேலும் சூர்யா Pan இந்தியா ஸ்டார் ஆக இல்ல உலக ஸ்டாராக ஆகும் அளவிற்கு தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
