மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஜொலிப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபகாலமாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுடன் காதலில் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவி வந்தன. நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் சகஜமாகப் பேசிக்கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கங்கனா ரணாவத் தற்போது விளக்கமளித்துள்ளார். சிராக் பாஸ்வான் தனது நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்டுள்ள அவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘மைலி நா மைலி ஹம்’ (Miley Naa Miley Hum) என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்ததிலிருந்து இந்த நட்பு தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். தங்களுக்குள் காதல் இருப்பதாகப் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

   

   

மேலும், “எங்களுக்குள் காதல் இருந்திருந்தால் அது எப்போதோ மலர்ந்திருக்கும்” என்று கூறியுள்ள கங்கனா, தங்களுக்குள் இருப்பது மரியாதைக்குரிய நட்பு மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தங்களது பணிகளைத் தொடர்ந்து வரும் வேளையில், வெறும் நட்பைத் தாண்டி வேறேதும் இல்லை என்று அவர் கூறியுள்ளதன் மூலம், கடந்த சில நாட்களாக இணையத்தில் நீடித்து வந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.