விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘கனா காணும் காலங்கள்’. இந்த தொடர் ஒரு திடமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தது. மக்கள் மனதில் இந்த தொடர் இன்று வரை ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இந்த சீரியலில் நடித்த புகழ் பெற்றவர் தான் நடிகர் கிரண்.

இதைத் தொடர்ந்து பல டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரையுலகில் பிரபலங்களாக ஜொலிக்கின்றனர்.

நடிகர் கிரண் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது நடிகர் கிரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகருக்கு தனது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கிறார்.

மேலும் இவரது வருங்கால மனைவியின் பெயர் Manjusha Karamala என்று கூறப்படுகிறது. தற்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் கிரணுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

