நாயகன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அடம்பிடித்த கமல்… உதவி இயக்குனர் அடித்த கமெண்ட்டால் கப் சிப் ஆன சம்பவம்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் ஆழ்வார்பேட்டை ஆண்டவர், கலைஞானி, உலகநாயகன் என பல பெயர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில்  வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட திரைப்படங்களில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார்.

   
Nayagan

இதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு மைல்கல் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறைக்கு பிறகு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இந்த படத்தின் உருவாக்கத்தின் போது நடந்ததாக சொல்லப்படும் சம்ப்வம் ஒன்று தமிழ் சினிமா வட்டாரத்தில் வெகு பிரபலம். இந்த படத்தில் கமல்ஹாசன் வேலு நாயக்கர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் பெரும்பகுதி அவர் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

179185 261612420645866 1751103628 n

படத்தில் அவரின் மகனான சூர்யா கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்திருப்பார். ஆனால் அந்த வேடத்திலும் தானே நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் கமல். ஆனால் மணிரத்னமோ அது க்ளிஷேவாக ஆகிவிடும் எனக் கூறி மறுத்துள்ளார். ஆனால் கமல் பிடிவாதமாக அந்த வேடமும் தனக்கே வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மணிரத்னம் எவ்வளவோ சொல்லியும் கமல் அதைக் காதில் வாங்கவில்லையாம். ஆனால் அப்போது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் ராஜேஸ்வர் சொன்ன ஒரு கமெண்ட்டால் கடுப்பாகி கமல் அதன் பிறகு இரட்டை வேடத்தில் நடிப்பது பற்றி எதுவுமே பேசவில்லையாம்.

ezgif 4 4bc0fb1597

அப்படி என்ன சொன்னார் தெரியுமா ராஜேஸ்வர்? கமலிடம் “சார் இந்த படத்தில் வேலு நாயக்கருக்கு ஒரு மகளும் இருக்கிறார். அந்த வேடத்திலும் நீங்களே நடித்துவிடலாமே?” என நக்கலாகக் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான கமல், அதன் பிறகு படம் முடியும்வரை இயக்குனர் சொன்னதை நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவாராம்.