Categories: சினிமா

கல்யாண வீடுகளில் வீடியோ எடுக்கும் கேமராவில் ஒரு படத்தையே எடுத்த கமல்ஹாசன்… என்னவொரு தைரியம் பாருங்க?

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜபார்வை. அதனால் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது தோல்விப் படமாக அமைந்தது. அதுபோல அவர் பரிசோதனை முயற்சிகளாக மேற்கொண்ட விக்ரம். ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்கள் இப்போது கொண்டாடப்பட்டாலும் அவை வெளிவந்த காலத்தில் தோல்விப் படங்களே.

இந்நிலையில்தான் தான் எடுத்த மும்பை எக்ஸ்பிரஸ் படம் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலைக் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். மும்பை எக்ஸ்பிரஸ் படம் தமிழில் வெளியான முதல் வெகுஜன டிஜிட்டல் கேமராவால் படமாக்கப்பட்ட படம். அப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கவில்லை. ஆனாலும் அதுதான் எதிர்காலம் என உணர்ந்த கமல்ஹாசன் அந்த படத்தை டிஜிட்டல் கேமராவில் படமாக்கியுள்ளார்.

அதற்காக அந்த படத்துக்கு கல்யாண வீடுகளில் வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்படும் பேனசோனிக் வகைக் கேமராவையே படம் முழுவதும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதுவே படத்தின் தோல்விக்கும் முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

35 minutes ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

45 minutes ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

55 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

1 மணத்தியாலம் ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

1 மணத்தியாலம் ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

1 மணத்தியாலம் ago