CINEMA
‘உடம்புல திமிரு கூடிப் போச்சா…நான் செஞ்ச அந்த செயலுக்காக கமல் என்னைக் கூப்பிட்டு திட்டினார்’… எம் எஸ் பாஸ்கர் பகிர்ந்த தகவல்!
MS பாஸ்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். 1987 ஆம் ஆண்டு நாடக கலைஞராக இருந்து வந்த எம்எஸ் பாஸ்கர் திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 1990களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் எம் எஸ் பாஸ்கர்.
2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்ற எம் எஸ் பாஸ்கர் சினிமா மட்டுமல்லாது பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். அப்போது 2000கள் காலகட்டத்தில் பிரபலமான தொடர்களான சின்ன பாப்பா பெரிய பாப்பா, அரசி, செல்வி போன்ற தொடர்களில் நடித்தார் எம் எஸ் பாஸ்கர். இவர் நடித்த பட்டாபி கதாபாத்திரம் மிகப் பிரபலம் அடைந்து இவரை பட்டாபி என்று மக்கள் அழைத்தனர்.
தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த எம் எஸ் பாஸ்கர் சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் பார்க்கிங் கீர்த்தி சுரேஷ் உடன் ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார் எம்.எஸ். பாஸ்கர்.
எம் எஸ் பாஸ்கருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல்தான். அதில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். அதில் ஒரு எபிசோட்டைப் பார்த்து கமல்ஹாசன் அவரை அழைத்து திட்டிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் “சின்னபாப்பா பெரிய பாப்பா சீரியலில் ஒரு எபிசோடில் என் உடல் முழுவதும் தங்கமாக மாறியதைப் போல உருவாக்கி இருந்தார்கள். அதற்காக என் உடலில் தங்க நிறத்தில் கெமிக்கல் பூசி நடித்தார். அதைப் பார்த்துவிட்டு கமல் என்னை அலுவலகத்துக்கு அழைத்துக் கோபமாக “உடம்புல திமிரு கூடிருச்சோ… உடம்புல என்னென்னமோ பூசிகிட்டு நடிக்குற. உடம்பு ஒரு கலைஞனுக்கு முக்கியம் தெரியும்ல எனக் கூறி கண்டித்தார்.” என அதில் கூறியுள்ளார்.