Connect with us

இந்தியன் படத்தில் அப்படி ஒரு விஷியம் இருக்கும்.. அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.. வைரலாகும் கமலின் த்ரோபேக் பேட்டி..

CINEMA

இந்தியன் படத்தில் அப்படி ஒரு விஷியம் இருக்கும்.. அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.. வைரலாகும் கமலின் த்ரோபேக் பேட்டி..

 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே. வெற்றிகரமான நடிகராக விளங்கினாலும் கமல் பரிசோதனை முயற்சிகள் செய்யாமல் இருந்ததில்லை. அப்படி செய்து அவர் கையை சுட்டுக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

90 களில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

   

ஆனால் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இந்தியன் உருவாகியிருந்தது. பின்னர் இதே போல லஞ்சம் செய்பவர்களைக் கொலை செய்யும் படமாக ரமணா உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வெற்றி பெற்றன.

ஆனால் இந்தியன் படத்தின் மீது அப்போதே அறிவுஜீவிகளால் வைக்கப்பட்ட விமர்சனம் என்னவென்றால் இந்த திரைப்படம் ஊழல் என்பது சாதாரண கீழ்நிலை ஊழியர்களிடம் மட்டுமே இருப்பது போல சித்தரிக்கிறது. மேலே இருந்து அமைப்பை சரிசெய்யாமல் கீழ்நிலையில் உள்ள ஊழலை ஒழிக்க முடியாது. மேலும் லஞ்சம் வாங்குபவர்களைக் கொன்றுவிட வேண்டும் என நினைப்பதெல்லாம் பாசிச மனநிலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்தியன் படம் ரிலீஸாகி வெற்றி பெற்ற பின்னர் கமல்ஹாசன் அளித்த ஒரு தொலைகாட்சி நேர்காணலிலும் இதே கருத்தை சொல்லியுள்ளார். அதில் “இந்த படத்தின் திரைக்கதையோடும், கதாபாத்திரத்தோடும் ஒன்ற முடிந்ததால்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்க முடிந்தது. எனக்கு இந்த படத்தில் இருந்த ஒரே ஒரு கருத்து வேறுபாடு என்னவென்றால் அதில் பாசிசத்தின் த்வனி இருக்கிறது என்பதுதான்” எனக் கூறியுள்ளார். அப்படிக் கூறிய கமல்ஹாசனே இப்போது 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 வில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top