Connect with us

போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பாலுமகேந்திரா… கமல்ஹாசனின் இந்த சூப்பர் ஹிட் படம் உருவாக அதுதான் inspiration-ஆ?

CINEMA

போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த பாலுமகேந்திரா… கமல்ஹாசனின் இந்த சூப்பர் ஹிட் படம் உருவாக அதுதான் inspiration-ஆ?

 

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

இவர் இலங்கை மட்டக்களப்பை சேர்ந்தவர். அங்கிருந்தபடியே சினிமா மீதான ஆர்வத்தால் பூனா திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் சேர்ந்து படித்தார். இதற்கிடையில் அவர் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்ததாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. அதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின்னர் அவர் தான் படித்த ஒளிப்பதிவு துறையில் தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

   

#image_title

இந்த இரண்டு சம்பவங்களையும் ஒன்றாக ஒரு செய்தி தாளில் படித்துள்ளார்கள் இயக்குனர்கள் லிவிங்ஸ்டனும், ஜி எம் குமாரும். இதைப் பற்றி அவர்கள் எதேச்சையாகப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவர்களுக்கு காக்கிச் சட்டை படத்தின் கதை தோன்றியதாம்.  தன்னை போலீஸ் வேலைக்காக தயார் படுத்திக் கொள்ளும் ஒருவன் அந்த வேலை கிடைக்காத விரக்தியில் தானே யூனிபார்ம் தைத்துப் போட்டுக்கொண்டு போலீஸாக செயல்படுவான். பின்னர் வில்லன் குழுவில் உளவாளியாக சென்று போலீசுக்கே உதவி செய்வான்.

இப்படி கதையை உருவாக்கியுள்ளார்கள் லிவிங்ஸ்டனும் ஜி எம் குமாரும். இந்த கதையை சத்யா மூவிஸ் நிறுவனத்துக்காக கமல்ஹாசனிடம் சொல்ல அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். அப்படி உருவாக்கப்பட்ட காக்கிச் சட்டை திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான ஹிட் படமாக அமைந்தது.

Continue Reading
To Top