Connect with us

தமிழில் ப்ளாக் காமெடி ஜானருக்கு விதைப் போட்ட படம்.. உலகநாயகன்-னா சும்மாவா சொன்னாங்க..!

CINEMA

தமிழில் ப்ளாக் காமெடி ஜானருக்கு விதைப் போட்ட படம்.. உலகநாயகன்-னா சும்மாவா சொன்னாங்க..!

தமிழ் சினிமாவில் பல புதுமைகளை தன்னுடைய திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். முதல் முதலாக ஆவிட் எடிட்டிங்,  திரைக்கதை மென்பொருள் மற்றும் லைவ் சவுண்ட் தொழில்நுட்பம் ஆகியவற்றை தன்னுடைய படங்களில் பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளார். அவற்றில் பல முயற்சிகள் அவரின் கையை சுட்டுள்ளன.

ஆனாலும் தொடர்ந்து அதை முயற்சி செய்வதை கமல் நிறுத்தியதில்லை. அப்படிதான் கமல் நடிப்பில் உருவான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும். 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படத்தோடு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

   

தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக பேசப்படும் வகைமையாக ப்ளாக் காமெடி எனும் ஜானர் உள்ளது. ஆனால் அப்படி முழுக்க டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியான திரைப்படம் என்றால் அது மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம்தான். கமல் கதையில் அவரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் இன்றைய புதிய தலைமுறை சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

ஒரு குழந்தைக் கடத்தல் சம்பவத்தை எவ்வளவு வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமோ அந்தளவுக்கு நகைச்சுவையாக உருவாக்கியிருப்பார்கள். குறிப்பாக கமல், பசுபதி மற்றும் வையாபுரி ஆகியோர் இணைந்து கடத்தலுக்கு முன்பாக போடும் திட்டங்களில் வெளிப்படும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிப்பை வரவழைப்பவை. அதே போல கமல் தன் அக்காவுடன் தெருவில் பிச்சை எடுத்து சந்தோஷமாக வாழ்ந்ததை நினைவேக்கத்தோடு விவரிக்கும் காட்சி பிளாக் காமெடியின் உச்சமாக அமைந்தது.

இந்த படத்தை பிலிமில் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முதல் முதலாக உருவாக்கினார் கமல்ஹாசன். ஆனால் அதனால் படத்தின் தரத்தில் சில போதாமைகள் ஏற்பட்டன. அதே போல அப்போதைய ரசிகர்களுக்கு ப்ளாக் காமெடி குறித்த அறிமுகமும் இல்லை.  திரைக்கதையின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆனால் வழக்கமாக கமல் படங்களுக்கு நடப்பது போலவே இந்த படத்துக்கும் காலம் தாண்டிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top