தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, சதி லீலாவதி, தெனாலி, பஞ்ச தந்திரம் என கமல்ஹாசனின் பல படங்கள் இன்றும் கொண்டாடப்பட்டாலும், இந்த படங்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் காப்பி அல்லது தழுவல் என்பது கமல்ஹாசன் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது. இது சம்மந்தமாகக் கமல்ஹாசனே தன்னுடைய படங்கள் பல படங்களின் பாதிப்பில் உருவானவைதான் என்று கூறியுள்ளார்.

#image_title
கமல்ஹாசன் திரைக்கு வெளியே தன்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக ஒரு நாத்திகராகக் காட்டிக் கொள்கிறார். ஆனால் திரையில் விருமாண்டி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் தீவிரமான கடவுள் பக்தராக நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் 79 ஆம் ஆண்டு வெளியான ‘நீயா’ என்ற பேய் படத்தில் கூட அவர் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகராக அந்த படத்துக்குத் தேவையான கதாபாத்திரமாக மாறவேண்டிய கடமைக்கா கமல் இதை செய்தாலும், அதன் பிறகு அவர் பெரிதாக இதுபொன்ற பேய்ப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
