BREAKING: “டொனால்ட் டிரம்ப்புக்கு செக் வைக்கும் கமலா ஹாரிஸ்”… 2028 அதிபர் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில் துணை அதிபராகப் பணியாற்றிப் புகழ்பெற்றார். கடந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவராகத் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ரெவரெண்ட் அல் ஷார்ப்டனால் நிறுவப்பட்ட ‘நேஷனல் ஆக்ஷன் நெட்வொர்க்’ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற ஹாரிஸிடம், அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்க மக்களுக்காகச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைப் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார். உலகமே உற்று நோக்கும் இந்த அறிவிப்பு, அமெரிக்க அரசியலிலும் அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.